கண்டுகொள்ளாத பேருந்துகள் – பொலிஸ் வாகனத்தில் பாடசாலை செல்லும் மாணவர்கள் – முகமாலை பகுதியில் தொடரும் அவலம்!
Tuesday, June 11th, 2024
பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் பயணிப்பதால் மாணவர்கள் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதேவேளை பேருந்துகள் மாணவர்களை ஏற்றி செல்லாத சம்பவம் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது.
இந்நிலையில், இன்றையதினம் பொலிசார் தமது வாகனத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்றுள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த சில மாதங்களிற்கு முன்னர், பெற்றோர் ஒருவர் பேருந்துக்கு குறுக்காக மோட்டர் சைக்கிளை நிறுத்தி பாடசாலை மாணவர்களை ஏற்றி அனுப்பிய சம்பவமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ் மாநகரசபை அதிரடி நடவடிக்கை!
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் நாளையதினத்தில் எவ்வித பொதுப்போக்குவரத்துகளும் இடம்பெறமாட்டாது!
எல்லை நிர்ணய பரிந்துரையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதி வரை நீடிப்பு!
|
|
|


