ஜூலை ஒன்றுமுதல் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முன்மொழிவு – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Thursday, June 6th, 2024
ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 0-30 யூனிட் ஒன்றின் விலை 8 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும்,
30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு 20 ரூபாயிலிருந்து 9 ரூபாவாகவும்,
60-90 அலகுகள் 30லிருந்து 18 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.
120 வரையான அலகுக்கு 50 முதல் 30 ரூபா வரையும் குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மாத்திரையைப் போதையாக பயன்படுத்திய விவகாரம் - பிராந்திய மருந்தகங்களிலேயே மாணவர்களுக்கு விற்கப்பட்டன!
சிறிய பாடசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!
நாட்டில் இன்றும் நாளையும் பரவலாக மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் - வளிமண்டலவியல் திணைக்களம...
|
|
|


