இந்தியாவில் இறுதி கட்ட வாக்குப் பதிவு – பல்வேறு பகுதிகளில் பதற்றம்!

Saturday, June 1st, 2024

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 07 கட்டங்களாக இடம்பெற்று வரும் நிலையில் இன்று இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகின.

இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் வன்முறை மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடளாவிய ரீதியில் 08 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை (01) காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது.

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 ஆகியதேதிகளில் 6 கட்டமாக 485 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதன்படி, உத்தர பிரதேசம்,மேற்கு வங்கம், பிஹார், ஒடிசா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் , சண்டிகரில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ஜாதவ்பூர் தொகுதியில் உள்ள பங்கரில் உள்ள சதுலியா பகுதியில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி மற்றும் சிபிஐ ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இதன்போது போது பலர் காயமடைந்ததுடன் மோதல் வன்முறையாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாலியில் சிலர் வாக்குச் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கைப்பற்றி அருகிலுள்ள குளத்தில் வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஜூன் மாதம் 04 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106