ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டு!
Wednesday, May 29th, 2024
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த விரும்புவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது பணம் சம்பாதிப்பதற்குத்தான் என்றும் அவர் வலியுறுத்தினார்.
‘நாட்டை சீரழிக்கும் சட்டங்களை தோற்கடிப்போம்’ என்ற தொனிப்பொருளில் மொட்டுக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டை சீரழிக்கும் சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106