ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் எண்ணம் எதுவும் கிடையாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
Wednesday, May 29th, 2024
ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் திட்டம் எதுவும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் பிற்போடுவதற்கான யோசனையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்து கருத்து தெரிவித்ததை தொடர்ந்து அரசியல் வட்டாரங்கள் நேற்று பெரும் குழப்பநிலை காணப்பட்டது.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரின் அறிவிப்பை முற்றாக நிராகரித்ததுடன், ஜனாதிபதி உடனடியாக பதிலளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
நேற்று மாலைக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பலர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர், இவர்களில் பலர் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியை தொடர்புகொண்ட எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரின் அறிக்கை குறித்து மேலும் விளக்கங்களை தெளிவுபடுத்தல்களைகோரியுள்ளதாக தெரியவருகின்றது.
இதனை தொடர்ந்து, தேர்தலை பிற்போடும் திட்டம் எதுவும் இல்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களை தனது சார்பில் கருத்துக்களை வெளியிடுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஏன் அவ்வாறான அறிக்கையை வெளியிட்டார் என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதிக்கு நெருக்கமான ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், அந்த அறிக்கையை நிராகரித்துள்ளதுடன், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் திட்டம் எதுவும் ஜனாதிபதியிடம் இல்லை என குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி ஜனநாயக விழுமியங்களை பின்பற்றுவார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இது பாலித ரங்க பண்டாரவின் தனிப்பட்ட அறிக்கை என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளாமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப் பணிகளைத் தொடருமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106