மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தாக்கிய தாய் – ஏறாவூர் பொலிசாரால் கைது!
Wednesday, May 29th, 2024
ஏறாவூர் பகுதியில் தமது மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு, தாக்கியதாகக் கூறப்படும் தாய் ஒருவரை ஏறாவூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் 7 வயதுடைய தமது மகன் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, 35 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனை சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரை நாளையதினம் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த காணொளியில் மற்றுமொறு பெண், இரண்டரை வயது சிறுவன் ஒருவரை சித்திரவதைக்கு உள்ளாக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. அது தொடர்பிலும் ஏறாவூர் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106