ஆண்களுக்கே அதிக பாதுகாப்பு அவசியம்!
Wednesday, September 14th, 2016
நாட்டில் பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கே தற்காலத்தில் பாதுகாப்பு அவசியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது பெண் பிள்ளைகளை விட ஆண்பிள்ளைகளே அதிகமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஆண் பிள்ளைகளே அதிகம் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என பெண்கள் மற்றும் சிறுவர் , பொது மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெண் பிள்ளைகளுக்கு அதிகமாக பாதுகாப்பை வழங்கும் நடைமுறையானது சமூகத்தில் வழக்கமாகியுள்ளதால் சமூகத்தில் பெண் பிள்ளைகள் மீது அதிகம் அவதானம் செலுத்தப்படுவதாகவும், இதன் காரணமாக ஆண் பிள்ளைகள் மீதான கவனம், பாதுகாப்பு குறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
வங்களா விரிகுடாவில் தாழமுக்கம்: இலங்கைக்கு சூறாவளி எச்சரிக்கை!
"ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு " – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ...
அடுத்த பெரும்போகத்திற்கு 150,000 மெட்ரிக் தொன் யூரியா இறக்குமதி - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


