இந்தியன் ப்ரீமியர் லீக் – இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி!

Monday, May 27th, 2024

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சென்னையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின.

இதன்படி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் பெட் கம்மின்ஸ் 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த நிலையில் 114 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் வெங்கடேஷ் ஐயர் 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106