தென்மேல் பருவப்பெயர்ச்சி இலங்கையை ஊடறுப்பதனால் மழையுடனான வானிலை மேலும் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
Monday, May 20th, 2024
தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக இலங்கையை ஊடறுப்பதனால் தற்போது நிலவுகின்ற காற்று,மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் இலங்கையின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களிலும் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலை காணப்படும்.
இதேநேரம் இலங்கைக்கு மேலாக மணித்தியாலத்திற்கு சுமார் 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இந்தநிலையில் பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106