வரலாற்று சாதனை படைத்தார் ருமானா அஹமத்!
Tuesday, September 13th, 2016
மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்களாதேஷ் சார்பாக முதலாவது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹமதுக்கு சொந்தமாகியுள்ளது.
அயர்லாந்துக்கு எதிராக பெல்ஃபாஸ்ட்டில் நடைபெற்ற மூன்றாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ருமானா ஹட்-ரிக் முறையில் விக்கெட்களை சரித்ததன் மூலம் 10 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலிரண்டு போட்டிகள் மழையினால் தடைப்பட்டதால் பங்களாதேஷ் 1–0 என தொடரை வென்றது.
பங்களாதேஷ் மகளிர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 107 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.
ஆனால், இடதுகை சுழல்பந்து வீச்சாளரான ருமானா அஹ்மத் அடுத்தடுத்து மூன்று பந்துகளில் கிம் கார்த், க்ளயார் ஷிலிங்டன், மேரி வோல்ட்ரன் ஆகியோரை ஒரே விதமாக எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்கச் செய்து தனது அணிக்கு சாதகத் தன்மையை ஏற்படுத்தினார். அயர்லாந்து மகளிர் அணியின் கடைசி 6 விக்கெட்கள் வெறும் 12 ஓட்டங்களுக்கு சரிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106