இம்மாத இறுதியில் அரிசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Monday, May 13th, 2024
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
முதற்கட்டமாக இலவச அரிசி வழங்கும் திட்டம் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 34 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் குறித்த திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும்.
இதன்படி மாவட்ட செயலகங்கள் ஊடாக தலா 10 கிலோகிராம் இலவச அரிசி வழங்கப்பட உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மனித பாவனைக்காக ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கிலோகிராம் அரிசியை மீண்டும் பதப்படுத்தி வெளியிடுவதற்கு தயாராக இருந்த அரிசி ஆலையொன்றை சுற்றிவளைப்பதற்கான நடவடிக்கையை அநுராதபுரம் மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நேற்றையதினம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106