ஊர்காவற்துறை பாடசாலை மின் துண்டிப்பு விவகாரம் – வடக்கின் பிரதம செயலாளர் தலையீடு – மீண்டும் வழங்கப்பட்டது மின்சாரம்!

Monday, May 13th, 2024

யாழ்ப்பாணம் தீவகப் பகுதிக்குட்பட்ட ஊர்காவற்துறை பாடசாலை ஒன்றில் ஏழு மாதங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் வடமாகாண பிரதம செயலாளரின் தலையீட்டினால் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

குறித்த பாடசாலையில் மின்சார இணைப்புக்கான பட்டியல் நிலுவைத் தொகை வலயக் கல்வி பணிமனையினால் செலுத்தப்படாத நிலையில் குறித்த பாடசாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீளப் பெறுவதற்கு தண்டப் பணமாக சுமார் 3000 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.

குறித்த பணத்தை வலயம் செலுத்தினால் கணக்காய்வு திணைக்களத்துக்கு காரணம் கூற வேண்டி வரும் என்ற காரணத்தினால் குறித்த பணத்தை கட்டாது காலம் கடத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அச்சு ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் வடமாகாண பிரதமர் செயலாளர் இ.இளங்கோவனின் துரித நடவடிக்கை காரணமாக  வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்ட பணிப்புரையின் காரணமாக குறித்த பாடசாலைக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106