இறக்குமதி தடைகளை நீக்குவது தொடர்பிலான விசேட அறிக்கையை வாகன இறக்குமதியாளர்கள் வழங்குவர் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை!

Thursday, May 9th, 2024

வாகன இறக்குமதி தடைகளை நீக்குவது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலான விசேட அறிக்கையை வாகன இறக்குமதியாளர்கள் தமக்கு வழங்குவரென, எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதித்துறை சார்ந்த நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை வாகன இறக்குமதியை மீள ஆரம்பிப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்திற்கும் அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நிதியமைச்சில் இடம்பெற்றது.

அனைத்து வாகனங்களையும் ஒரே நேரத்தில் இறக்குமதி செய்வதற்கு பதிலாக பல பிரிவுகளின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் நடைமுறைக்குரியதென இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

பொது போக்குவரத்துக்கு தேவையான வாகனங்கள், பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், தனியார் வாகனங்கள் போன்றவற்றை பாகங்களாக இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது மிகவும் நடைமுறைக்குரியது என வலியுறுத்தப்பட்டது. வரி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106