மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை மகளிர் அணி தகுதி!

Monday, May 6th, 2024

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மகளிர் அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை மகளிர் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சியம் மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதற்கமைய 150 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில் இலங்கை மகளிர் அணி மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106