ஜனாதிபதி தேர்தல் விவகாரம் – யார் இணங்குகிறாரோ அவரது வெற்றிக்காக வாக்களித்து அந்த வெற்றியின் பங்காளிகளாக தமிழ் மக்கள் மாறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
Sunday, May 5th, 2024
பொதுவேட்பாளர் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக போட்டியிடுபவர்களுடன் எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்தப் பேச்சுவார்த்தைகளில் யார் இணங்குகிறாரோ அவரது வெற்றிக்காக வாக்களித்து அந்த வெற்றியின் பங்காளிகளாக தமிழ் மக்கள் மாறவேண்டும். இதுதான் தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளை தீர்க்க சரியான வழிமுறையாகும். என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் –
பொதுவேட்பாளரை போட்டியிடச் செய்து உலகுக்கு உணர்த்துவோம் என்பதெல்லாம் வழமையான உசுப்பேற்றலின் ஒரு வடிவம்தான் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திற்கு விஷேட விஜயத்தை மேற்கொண்டு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து உரிய பணிப்புரைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கிய நிலையில் ஊடகவியலாளர்கள் பொது வேட்பாளர் தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106