ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி – உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!
Wednesday, April 24th, 2024உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் வெற்றிக்காக ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரானின் உதவியின்றி இலங்கையினால் உமா ஓயாவில் இருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை கொண்டு செல்ல முடியாது என இன்று நடைபெற்ற உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்ட திறப்பு விழா நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உலகளாவிய தெற்கு நாடுகள் தமது அடையாளத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட விரும்புவதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் இத்திட்டம் ஒன்றாகும்.
இதேவேளை ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர்கள் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் குறித்த திட்டத்தைத் திறந்து வைப்பதற்காகவே ஈரான் ஜனாதிபதி இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்திருந்தார்
மேலும் ஈரான் – இலங்கை ஜனாதிபதிகளின் பங்கேற்புடன் 5 இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106