கையடக்கத் தொலைபேசி மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவிப்பு!
Monday, April 22nd, 2024கையடக்கத் தொலைபேசி மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம்முதல் இந்த சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும், போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளில் கட்டணத்தை காட்டும் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மட்டும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகள் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் கட்டணங்களை வசூலித்தால் அது தொடர்பான முறைப்பாடுகளை 0112860860 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தரமான மருத்துவ சிகிச்சை : முன்னணி நாடுகளின் பட்டியல் வெளியீடு!
தாயின் கவனக் குறைவால் பலியான 4 வயது சிறுமி: சோகத்தில் மிதக்கிறது மூதூர்!
2021 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடன் திடவுறுதியுடன் வரவேற்போம் - வாழ்த்துச் செய்தியில் ஜனாதி...
|
|
|


