கடற்படை ஹெலிகப்டர்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து – மலேசியாவில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!
Tuesday, April 23rd, 2024மலேசியாவில் கடற்படை ஹெலிகப்டர்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை (23) இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரோயல் மலேசியன் கடற்படை கொண்டாட்ட நிகழ்வுக்கான ஒத்திகையின் போது இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் உயிரிழந்தவர்கள் தொடர்பான உத்தியோகப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
M503-3 கடல்சார் செயற்பாட்டு ஹெலிகப்டரில் (HOM) ஏழு பணியாளர்கள் இருந்ததாகவும், மற்றைய ஹெலிகப்டரான M502-6, இல் மூன்று பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் மூன்றாம் திகதிமுதல் ஐந்தாம் திகதி வரை இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவிருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106