தமிழ் மக்களை தோல்வியுற இடமளியேன் – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் சூளுரை!

Saturday, April 20th, 2024


தமிழ் மக்களை தோல்வியுற இடமளியேன் என சூளுரைத்துள்ளமன்னா  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளின் சுயநலப் பொறிக்குள் சிக்கி தமிழ் மக்கள் ஏமாற்றமடையவோ தோல்வி காணவோ கூடாது எனவும்
சுட்டிக்காட்டியுள்ளார்

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும்  முன்வைக்கப்படும் தமிழ்  பொது வேட்பாளர் விடயத்திலும் எமது மக்கள்  இனியொருதடவை தோல்வியுற இடமளிக்கக் கூடாதெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

மன்னார் மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்த அமைச்சர் மாவட்டத்தின் பல  இடங்களுக்கும் சென்று நிலைமைகளை பார்வையிட்டிருந்தார்.

இதன் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறும்போது இவ்வாறு தெரிவித்திருந்த அமைச்சர் மேலும் கூறுகையில் –

தமிழ் பொது வேட்பாளர் விடயம் என்பது பயனற்ற ஒரு விடயம்.

தற்போதைய நிலையில் தென்னிலங்கையில் போட்டியிடும் ஒரு தரப்பினருடன் இணக்கத்தை ஏற்படுத்தி அவர்களிடம் ஆதரவு வழங்கி அதனூடாக பேரம் பேசும் சக்தியாக நாம் உருவாக வேண்டும்.

முன்பதாக கடந்தகால தமிழ் அரசியல் தலைவர்களும் போராட்ட அமைப்புகளும் தத்தமது சுயநல தேவைகளுக்காக மற்றவரை தடம் போட்டு வீழ்த்த வேண்டும் என்ற நிலையில் இருந்து முன்னெடுத்த பொறிமுறைகள் அனைத்தும் தோல்வியிலேயே கண்டுள்ளது.

இதனால் ஒட்டுமொத்த தமிழினமும் சொல்லொணா இன்னல்களையும் எதிர்கொண்டுவிட்டனர்.

ஆனால் எமது நடவடிக்கைகள் தமிழ் மக்கள் தோல்வி காணக்கூடாது என்ற நிலையிலிருந்தே முன்னெடுக்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது அதற்கான கள நிலைமைகளை உருவாக்க சாதுரிதமான   வழிமுறைகளும் எம்மிடம் உள்ளது. அதனை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000

Related posts:

வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க இலங்கை - இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கை ...
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்...
மட்டுவிலில் பொருளாதார மத்திய நிலைய கட்டுமாண பணிகள் நிறைவு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜ...

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நலன் காக்க உடனடி நடவடிக்கைகள் தேவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...
பலமான எதிர்காலத்தினை உருவாக்கும் முயற்சிகளின் போது எதிர்கொள்ளும் தடைகள் அனைத்தையும் உடைத்து முன்னேறு...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் ஜூலை மாதத்திற்கான ஒருங்கிணைப்பு குழு க...