இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட சுமார் 11 ஆயிரம் மக்கள்!

Thursday, April 18th, 2024

இந்தோனேசியாவின் சுலவெசி தீவில், எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள டானா டோராஜா என்ற இடத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், 18 பேர் உயிரிழந்தனர்.

இந் நிலையில், நேற்று (17) சுலவெசி தீவில், ருவாங் என்ற எரிமலை, ஐந்து முறைகள் வெடித்துச் சிதறியதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

அப்பகுதி முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் 800 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும், இந்தோனேஷியா விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், எரிமலையை சுற்றி 6 கி.மீ தொலைவுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் இருக்கக் கூடாது எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுனாமி தாக்கக்கூடிய ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்திய நிலநடுக்கங்களால் டெக்டானிக் அடுக்குகளில் ஏற்பட்ட தாக்கமே இந்த எரிமலை வெடிப்புக்கு காரணம் என இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106