பொருளாதார மறுசீரமைப்பு சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!
Sunday, April 7th, 2024பொருளாதார மறுசீரமைப்பு சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்கவும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற இளைஞர் மாநாடொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சட்ட பூர்வமாக்கி நாட்டிற்கு நிவாரணம் வழங்குவதுடன், பொருளாதார மறுசீரமைப்பு சட்டமூலம் எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பஸ் வண்டிகளில் GPS தொழில்நுட்பம் - அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா
கை விடப்படுமா காலி சர்வதேச மைதானம்!
அக்குபஞ்சர் மருத்துவத்தை அழிக்க சில ஆங்கில மருத்துவர்கள் சூழ்ச்சி - , அக்குபஞ்சர் வைத்தியர் கே. டினே...
|
|
|


