அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டும்- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
Saturday, April 6th, 2024அறிவைப் புதுப்பித்தல் என்பது கல்வியின் பாரிய பணியாக மாறியுள்ளதாகவும், அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
நவீன தொழிநுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களா மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் எவ்வளவுதான் பலப்படுத்தப்பட்டாலும், நாடு உலகத்துடன் முன்னேறி மாற்றமடையாவிட்டால் அது பின்னோக்கிச் செல்லும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இன்று (05) பிற்பகல் இடம்பெற்ற கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் 2022 வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டை மீண்டும் வீழ்ச்சியடைய விடாமல் திட்டமிட்டு நாட்டை கட்டியெழுப்ப முடிந்தது. இது போதுமானது அல்ல. இன்னும் 05 முதல் 10 ஆண்டுகள் இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும்.
நாம் ஒரு நாடாக அபிவிருத்தியடைய வேண்டும். அடுத்த 10-15 ஆண்டுகளில் வலுவான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். உலகத்துடன் இணைந்து நாம் இந்தப் பயணத்தில் செல்ல வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் நவீனமயமாக்கல் அவசியம்.
அதற்கு அறிவும் தொழில்நுட்பமும் தேவை. Smart Agriculture என்பது ஒரு வார்த்தை அல்ல. அதற்குத் தேவையான அறிவைப் பெற வேண்டும். மேலும், பிளாக்செயின் தொழில்நுட்பம் ஒரே தடவையில் கிடைக்காது. அதற்கும் அறிவு வேண்டும்.
இன்று உலகில் அரசாங்கங்களுக்கும் ஒன்லைன் நிறுவனங்களுக்கும் இடையே பெரும் இழுபறி நிலவி வருகிறது. இன்று, ஒவ்வொரு நாடும் தனது அதிகார எல்லைக்குள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் பழக்கத்தில் உள்ளது.
ஆனால் இப்போது ஒன்லைன் செயற்பாடுகளால் எதையும் கட்டுப்படுத்த முடியாது. ஆபாச செயல்களை கட்டுப்படுத்த முடியாததால், அதற்கான சட்டங்களைக் கொண்டு வரவேண்டியுள்ளது.
வேகமாக மாறிவரும் இந்த உலகில் அறிவை வளர்ப்பது மிகவும் அவசியம். உங்கள் அறிவைப் புதுப்பிக்காமல் உலகத்துடன் முன்னேற முடியாது. எனவே, அறிவைப் புதுப்பித்தல் கல்வியின் முக்கியப் பணியாகிறது. இந்த நோக்கத்திற்காக, அரசாங்கம் இந்த நாட்டில் பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாகாணத்திலும் கல்விச் சபையை நிறுவுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஆங்கில மொழி அறிவு வழங்கப்பட வேண்டும். மேலும், பாடசாலை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவையும், அதற்குத் தேவையான உபகரணங்களையும் வழங்க வேண்டும்.
இன்று உலகம் செயற்கை நுண்ணறிவு அல்லது AI தொழில்நுட்பத்துடன் முன்னேற தயாராக உள்ளது. நாமும் அந்த அறிவைப் பெற வேண்டும். அப்போதுதான் இந்த நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேற முடியும். எனவே, பாடசாலைத் பாடத்திட்டத்தில் AI தொழில்நுட்பத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். இது வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் போது, AI தொழில்நுட்பத்தில் இந்தியாவை விடவும் முன்னேறும் திறன் நம்மிடம் உள்ளது. அதற்கான புதிய சட்டங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பசுமைப் பல்கலைக்கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக மாற்றவும் எதிர்பார்க்கிறோம். அப்போது நாட்டில் இன்னொரு புதிய பல்கலைக்கழகம் உருவாகும். மேலும், எனது உத்தியோகபூர்வ இந்தியப் விஜயத்தின் போது, சென்னை ஐஐடியின் வளாகம் ஒன்றை நம் நாட்டிற்கு வழங்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இந்நாட்டின் கல்வி முறையில் புதிய மாற்றம் ஏற்பட்டால்தான் அடுத்த 75 ஆண்டுகளில் இந்த நாடு முன்னேறும். அதைச் செய்யாமல் நீங்கள் முன்னேற முடியாது. எவ்வளவுதான் பொருளாதாரத்தை பலப்படுத்தினாலும், உலகத்துடன் முன்னேறாவிடில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் தெரிவித்துள்ளமை பகுறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106