இந்தியன் ப்ரீமியர் லீக் – சன்ரைஸஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கட்டுகளால் வெற்றி !

Monday, April 1st, 2024

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சன்ரைஸஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய சன்ரைஸஸ் ஹைத்ராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் சன்ரைஸஸ் ஹைத்ராபாத் அணியின் அபிஷேக் சர்மா அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மோஹித் சர்மா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

தொடர்ந்து 163 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய, குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஒவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை பதிவு செய்தது.

துடுப்பாட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்ஷன் அதிகபட்சமாக 45 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.

192 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

எனினும் கடைசி நேரத்தில் களமிறங்கிய தோனி, 16 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள், 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106