இவ்வருடன் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு இலக்கு – இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவிப்பு!
Wednesday, March 20th, 2024
இவ்வருடம் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான இலக்கை அடைய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
இந்த வருட காலப்பகுதியில் 5 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக வழங்கப்படும் வசதிகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா தொழிலில் சின்ன சின்ன பிரச்சினைகள் உள்ளதை பார்த்தோம். அவற்றைத் தீர்க்க தீர்வுகளைத் தேடுகிறோம். எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிரதமர் அலுவலகம் நிராகரிப்பு!
இலங்கையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - அமெரிக்கா!
ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத தனியார் துறையினருக்காக சமூக பாதுகாப்பு நிதியம் - தொழில் அமைச...
|
|
|


