2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி – உறுதி செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் பேரவை!
Saturday, March 16th, 2024
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதி செய்துள்ளது.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் தொடருக்கு இலங்கையும் இந்தியாவும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.
குறித்த தொடரில் 20 அணிகள் பங்குபெறவுள்ள நிலையில், 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிலியந்தளை தாக்குதல் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்கா பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு...
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி கிடைக்காதவிடத்து மாற்று வழிகள் – தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி !
இலங்கையிலுள்ள சுமார் 18% உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளன - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ...
|
|
|


