பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் – விசனத்தில் கிளிநொச்சி மாவட்ட பெற்றோர்!
Tuesday, March 12th, 2024
கிளிநொச்சியில் வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கு குறுக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி பாடசாலை மாணவர்களை ஏற்றிய சம்பவம் இன்று (12) பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது அரச பேருந்துகள் பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர்.
குறித்த பிரச்சினை நீண்ட காலமாக தொடர்வதுடன் இதனால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும், சில சமயங்களில் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இன்றையதினமும் 7.40 வரை எந்தவொரு பேருந்தும் மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பேருந்துக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த பிரச்சினையானது, எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றது.
காலை 7.30 மணிக்கு பாடசாலைகள் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிலையில், இவ்வாறு மாணவர்கள் தாமதமாக செல்லுதல் மற்றும், செல்லாதுவிடல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கின்றனர்.
மன உளைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவதுடன், கல்வியில் ஆர்வம் காட்டுதல் மற்றும் பூரண கல்வியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அத்துடன், பாடசாலை இடைவிலகலுக்கும் உந்துதலை கொடுக்கும் அபாயமும் காணப்படுகிறது.
மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், அந்த பிரதேச மாணவர்களின் போக்குவரத்தினை சீர் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்படுகின்றது.
இவ் விடயம் தொடர்பில் துறைசார் தரப்பினர் தலையீடு செய்து, உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106