இலங்கையில் முதன்முறையாக மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் முழுமையான தொழிற்சாலை!
Saturday, March 9th, 2024
இலங்கையில் முதன்முறையாக மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் முழுமையான தொழிற்சாலை திறக்கப்படவுள்ளது.
மருதானை புகையிரத திணைக்கள களஞ்சியசாலை வளாகத்திலேயே இந்த தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.
வேகா பொறியியல் நிறுவனத்தினால் மருதானை புகையிரத களஞ்சியசாலை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட மின்சார முச்சக்கரவண்டிகள் உற்பத்தி மற்றும் முச்சக்கரவண்டிகளை மின்சாரமாக மாற்றும் தொழிற்சாலை வளாகம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையிலேயே முழுமையாக உற்பத்தி செய்யப்படும் Vega நிறுவனத்தின் ELECTRIC முச்சக்கர வண்டியின் முழு உற்பத்தி செயல்முறையும் இந்த உற்பத்தி தொழிற்சாலை வளாகத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது.
Related posts:
100 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மெத்தனம் - யாழ்ப்பாணத்தில் சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை!
கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!
|
|
|


