நிலையான அபிவிருத்திக்கான பயணத்தில் பெண்களின் பங்களிப்பை மேலும் பலப்படுத்த விரிவான வேலைத் திட்டம் – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024

பாரம்பரிய வகிபாகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவு, திறன் மற்றும் தொழில் தன்மையுடன் கூடிய இலங்கைப் பெண்கள் இன்று நாட்டின் பொருளாதாரத்திற்கு தனித்துவமானப் பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாளையதினம் மகளிர் தினமாகும். இந்நிலையில் இது குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்திக் குறிப்பில் –

நிலையான அபிவிருத்திக்கான பயணத்தில் பெண்களின் பங்களிப்பை மேலும் பலப்படுத்த அரசாங்கம் தற்போது விரிவான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதோடு, டிஜிட்டல்  மற்றும் பசுமைப் பொருளாதாரத்திற்காக பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

மேலும், மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், புதிய சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கிப் பெண்களின் அபிமானம் மற்றும் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், பெண்கள் மீதான பாகுபாட்டைத் தவிர்க்க, முதல் முறையாக தேசிய ஆண் /பெண் பாலினக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளமை சிறப்பம்சமாகும்.

இதேவேளை தேசிய மகளிர் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான இரண்டு புதிய சட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான ஐந்தாண்டு தேசிய செயல் திட்டம் தற்போது இறுதிச் செய்யப்பட்டு அமைச்சரவை  அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

அத்தோடு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கத் தேவையான சட்ட திருத்தங்களையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் வளமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒட்டுமொத்த  பெண்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதோடு, சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106