நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிப்பு!

Wednesday, March 6th, 2024

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (புதன்கிழமை) கொழும்பின் காற்று மாசு 127 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலை உணர்திறன் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், காலி கராப்பிட்டியில் 90 ஆகவும், புத்தளத்தில் 88 ஆகவும், குருநாகல் மற்றும் அனுராதபுரத்தில் 86 ஆகவும் காற்று மாசு சுட்டெண் பதிவாகியுள்ளது.

அத்துடன் நாட்டின் காற்று மாசுக் குறியீடு 50 யை கடந்துள்ளமையினால் மக்களுக்கு அதிக ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மக்களின் தேவைகளை நிறைவேற்றும்போது அரச கொள்கையின் பிரகாரமும் செயற்பட வேண்டியது அவசியம் – துறைசார் அதி...
விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை ஆரம்பிக்க பல்கலைக்கழகங்களுக்கு இன்றுமுதல் அனுமதி - பல்கலை மானியங...
நாட்டில் கை, கால் மற்றும் வாய் தொடர்புடைய நோய்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு -  குழந்தை நல மருத்து...

வடக்கு மாகாணத்தில் ஆவா குழுவின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள்!: பொலிஸ் உயரதிகாரிகள் யாழில் தெரிவி...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து : பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நாளைமுதல் 5000 ரூபா கொடுப்பனவு...
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு!