பெரும்போக நெல் அறுவடையின் போது, ஏற்பட்டுள்ள இழப்பீடு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிப்பு – விவசாய அமைச்சு தெரிவிப்பு!
Sunday, March 3rd, 2024
பெரும்போக நெல் அறுவடையின் போது, ஏற்பட்டுள்ள இழப்பீடு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
சில பகுதிகளில் அது 25 சதவீதமாக அதிகரித்துள்ளாதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பெரும்போகத்தின் 3 லட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் டன் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெற்பயிர் நீண்டகாலமாக பயிரிடப்பட்டிருந்தாலும் அது எப்போது விளையும் என்ற புரிதல் இல்லாமையே இதற்கு பிரதான காரணமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பயிர்ச் சேதங்களால் ஏற்பட்டுள்ள இழப்பு பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இன்று உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள பைஸர் நிறுவனத்துடன் உடன்படிக்கை!
பெரும்போகத்தின் உரம் விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் -. விவசாய அமை...
|
|
|


