கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப்பரீட்சை மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!
Thursday, February 29th, 2024
புதிய கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 4,232 பேர் நேர்காணலில் பங்கேற்க உள்ளனர்.
நேர்முக பரீட்சைகளின் பின்னர் வெற்றிடங்கள் மிக விரைவாக நிரப்பப்படும் என இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பேஸ்புக் ஊடாக ஏற்பட்டுள்ள ஆபத்து!
சிறுவர்களுக்கு தடுப்பூசி 100 விகித செயற்திறனை வழங்கும் - பைசர் நிறுவனம் அறிவிப்பு!
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தகவல்!
|
|
|


