முறையான பேருந்து தரிப்பிடம் இல்லை – யாழ்ப்பாணத்துக்கான தனியார் நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக இடை நிறுத்தம்!
Wednesday, February 28th, 2024
முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்றுமுதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள், அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் தமது சேவையை முற்றாக இடைநிறுத்தியுள்ளளன
இருந்தபோதும், உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று தமது சேவையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கூட்டுறவு கிராமிய வங்கிகள் ஊடாக விசேட கடன்திட்டம் அறிமுகம் - விரைவில் அமுலாக்கப்படும்!
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக மஹேல ஜயவர்தன நியமனம்!
ஒரு பில்லியன் டொலரை எட்டும் இலக்குடன் இலங்கை - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை!
|
|
|


