அரசியல் கட்சிகள் – தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் சந்திப்பு – சட்டத்தில் உள்ள விதிகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தல்!
Tuesday, February 27th, 2024
அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
தேர்தல் செலவின கட்டுப்பாட்டு சட்டம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த சட்டத்தில் உள்ள விதிகள் குறித்து இதன்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளது.
இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த சந்திப்பின் இரண்டாம் கட்ட கலந்துரையாடல் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 3ஆம் திகதிக்குள் சமர்ப்ப...
40 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்தது எரிந்து நாசம் - உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தெரிவ...
கிழக்கு கடலில் கொந்தளிப்பு - எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கு சாத்தியம...
|
|
|


