வெளியேறுகின்றார் ஜூலி சங் – இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமனம்!
Monday, February 26th, 2024
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சிரேஷ்ட அமெரிக்க இராஜதந்திரியான எலிசபெத் கெத்ரின் ஹோஸ்ட், பாகிஸ்தானுக்கு பொறுப்பான தலைமை பிரதி செயலாளராக பதவி வகித்துவருகின்ற நிலையிலேயே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்க செனட் சபையின் அனுமதிக்கிணங்க இலங்கை அரசாங்கம் இதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளது - சிறுவர்களின் சார்பில் கடமைகளை மீள ஆரம்பியுங்கள் – ஆசிரி...
அரசியல் இலாபங்களுக்காக மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டை நிறுத்துங்கள் - யாழ்ப்பாண...
10 அணிகள் பங்கேற்புடன் 9 ஆவது ICC மகளிர் T20 உலகக்கிண்ணம் இன்று ஆரம்பம்!
|
|
|


