செஷெல்ஸில் இருபது ஆண்டுகளில் முதல் முறையாக தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி!
Sunday, September 11th, 2016
செஷெல்ஸ் தீவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தசாப்த காலங்களில் முதல் முறையாக எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணியான எல்.டி.எஸ்-க்கு புதிய தேசிய பேரவையில் 15 இடங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ முடிவுகள் காட்டுகின்றன. இது அதிபர் ஜேம்ஸ் மைக்கேலின் மக்கள் கட்சியை விட 5 இடங்கள் அதிகமாகும்.
இந்திய பெருங்கடலில் இருக்கும் இந்த தீவுக் கூட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சி தான் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.. முடிவு அறிவிக்கப்படும் முன்னரே, புதிதாக அமையும் பேரவையோடு இணைந்து பணிபுரிய தயாராக இருப்பதாக அதிபர் மைக்கேல் அறிவித்துள்ளார்.

Related posts:
100 ரூபா லஞ்சம் கொடுக்க மறுத்த 2 தொழிலாளர்களை அடித்துக்கொன்ற போலிஸார்!
பேருந்து விபத்து: பாகிஸ்தானில் 15 பேர் பலி!
மகளை வடகொரியாவின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்க கிம்ஜோங் உன் திட்டம்!
|
|
|


