வட்டுக்கோட்டையில் முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
Thursday, February 15th, 2024
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை (15) காலை இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சவுதி சபாநாயகர் - ஜனாதிபதி சந்திப்பு!
இலங்கையின் விவசாயத்துறையை வளப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் - அமைச்சர் மகிந்த அமரவீரவிடம...
மன்னார் வைத்தியசாலையின் தீர்க்கப்படவேண்டிய மிக முக்கிய பிரச்சினைகளை ஆளமாக முன்வைத்து தேவையை நிச்சயமா...
|
|
|


