அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

Tuesday, February 13th, 2024

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று காலை யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடம்பெற்றது.

இதன்போது பிரதேச ரீதியில் இனங்காணப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்கீகாரங்களை பெற்றுக்கொள்ளும் முகமாக யாழ்-கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் இன்றைய கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில், பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் , வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள், கடற்றொழிலாலாளர் கூட்டுறவு சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பிரதேச பொது அமைப்புக்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள், திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் ஊடக பிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதனூடாக மேற்கொள்ள திட்டமிடப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

000

Related posts:


பாலுற்பத்தித் திட்டம் வடக்கு கிழக்கு பகுதிக்கும் பரவலாக்கப்பட வேண்டும் - புதிய பாதீட்டினூடாக டக்ளஸ் ...
கடனுக்கு கடன் பரிகாரமாகாது -  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
600 ஹெக்டேர் காணியில் கெளதாரிமுனையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் - மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர...