பாலுற்பத்தித் திட்டம் வடக்கு கிழக்கு பகுதிக்கும் பரவலாக்கப்பட வேண்டும் – புதிய பாதீட்டினூடாக டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 19th, 2016

புதிய வரவு செலவு திட்டத்தில் நாட்டில் பாலுற்பத்தியை விருத்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் முன்னேற்றகரமானவையாகவே காணப்படுகின்றன. இத் திட்டம் வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கும் பரவலாக்கப்படுமென நம்புவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில் –

ஒரு பாலுற்பத்தியாளருக்கு 10 மாடுகள் வீதம் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இத்துறையை வளர்த்தெடுப்பதற்கு மேய்ச்சல் தரைகளையும் நாம் அதிகமாக உருவாக்க வேண்டியுள்ளது. வடக்கு – கிழக்குப் பகுதிகளில் மேய்ச்சல் தரைகள் இல்லாமை காரணமாக இத்துறையை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையும் அவதானத்தில் கொள்வது அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

001

Related posts:


தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - யாழ் பல்கலை மாணவர் மத்தியில் டக்ளஸ் தேவான...
யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்ப...
மக்கள் நலன்களுக்காக அன்றி தத்தமது சுயநலன்களை ஈடு செய்வதற்காகவே சங்கு ஊதுகின்றனர் – செயலாளர் நாயகம் ட...