ஹெலிகொப்டர் விபத்து – சிலியின் முன்னாள் ஜனாதிபதி `செபாஸ்டியன் பினேரா` உயிரிழப்பு!
Wednesday, February 7th, 2024
ஹெலிகொப்டர் விபத்தில் சிலியின் முன்னாள் ஜனாதிபதி `செபாஸ்டியன் பினேரா` உயிரிழந்துள்ளார்.
தனக்குச் சொந்தமான ஹெலிகொப்டரை நேற்றைய தினம் அவர் இயக்கிச் சென்றுள்ள நிலையில், தெற்கு சிலியில் உள்ள ஏரியொன்றில் விழுந்து குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த ஹெலிகொப்டரில் செபாஸ்டியனுடன் சேர்த்து 4 பேர் பயணித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த மீட்புப் படையினர், செபாஸ்டியனின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளதோடு, படுகாயங்களுக்குள்ளான ஏனைய மூவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் செபாஸ்டியனின் மரணத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என சிலியின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அறிவித்துள்ளார்.
74 வயதான செபாஸ்டியன் பினேரா இதுவரை இரண்டு முறை சிலியின் ஜனாதிபதியாகப் பதவிவகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106