வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் 1300 வைத்தியர்கள் நியமனம் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Tuesday, February 6th, 2024
நாட்டின் அரச வைத்தியசாலைகளில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் 1300 வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த வைத்தியர்கள் பயிற்சியை முடித்ததும் நியமனம் வழங்கப்படும் என, சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வாரம் பயிற்சிகளை நிறைவு செய்த 90 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்காலத்தில் வைத்தியர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையில் அதி நவீன ரயில் நிலையம் நிர்மாணிப்பு!
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை: இறுதி கட்டளைக்கான திகதி அறிவிப்பு!
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை கட்டாயப்படுத்த விரைவில் சட்ட நடவடிக்கை - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்பு...
|
|
|


