இலங்கையிலும் பூமியதிர்ச்சி !
Sunday, September 11th, 2016
பகுதியில் நேற்று இரவு 9.00 மணியளவில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதியில் சிறு பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாக வீடுகளுக்கும் கட்டிடங்களுக்கும் சிறு சேதங்களுக்குள்ளானதாகவும் நிலங்களிலும் சிறு,சிறு வெடிப்புக்களை அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் காரணமாக மக்கள் மத்தியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. சிறிது நேரத்தில் பொலிஸாரும் அப்பகுதிக்கு வந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.இதேவேளை, பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று 6.1 ரிச்டர் அளவில் பயங்கர பூமியதிர்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
அரச சேவையாளர்களுக்கு இன்றுமுதல் வேதன அதிகரிப்பு - நிதியமைச்சு தெரிவித்துள்ளது!
மேல் மாகாணத்தில் 80 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் - கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!
நீரை வீணாக்குவதைத் தருங்கள் – பொதுமக்களுக்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அவசர அறிவுற...
|
|
|


