அரச சேவையாளர்களுக்கு இன்றுமுதல் வேதன அதிகரிப்பு – நிதியமைச்சு தெரிவித்துள்ளது!

Monday, July 1st, 2019

முன்மொழியப்பட்ட அரச சேவையாளர்களின் வேதன அதிகரிப்பு உள்ளிட்ட கொடுப்பனவுகளை அதிகரித்தல் இன்றுமுதல் அமுல்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 11 இலட்சம் அரச சேவையாளர்களுக்கான 2 ஆயிரத்து 500 ரூபா இடைக்கால கொடுப்பனவு, பாதுகாப்பு கொடுப்பனவை உயர்த்துதல், ஓய்வூதியதாரிகளின் வேதன முரண்பாட்டை நீக்குதல் மற்றும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவை உயர்த்துதல் உள்ளிட்டவை இன்றுமுதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக சுமார் 40 ஆயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:

சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை தொடரும் - சர்வதேசத்திடம் அதிபர் ரணில் விக்ரமசிங்க த...
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் நாளை வரை நீடிப்பு!
பொதுப் போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர்த்தமானி!