வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளைமறுதினம்!
Monday, January 22nd, 2024
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் (24) இடம்பெறவுள்ளது.
அதனை முன்னிட்டு , நேற்று (21) கோபுரங்கள் , தூபிகளுக்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன
அதனை தொடர்ந்து இன்று (22) காலை 7.00 மணி முதல் , நாளை (23) மாலை 5.00 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும்.
அதனை தொடர்ந்து நாளைமறுதினம் (24) காலை 9.38 மணிமுதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புதிய நாணயங்கள் வெளியீடு!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட கடற்பகுதியை உரிய ஆய்வின் பின் கடற்றொழிலுக்காக அனுமதிக்கப்...
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டத்தின் முதல் தவணை இம்மாதம் முதல் வாரத்திற்குள் வழங்க நடவடி...
|
|
|


