காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டு – குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவு!
Saturday, January 13th, 2024
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சீமெந்து தொழிற்சலையில் கும்பல் ஒன்று இரும்பு திருட்டில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் திருட்டில் ஈடுபட்டு இருந்த மூவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பரிந்துரை கிடைக்க பெற்றவுடன் மரக்கறிகளுக்கான உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி - உர செயலாளர் காரியாலயத்...
குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் வைத்தியர் பரிந்துரையின்றி மருந்துகளை வழங்காதீர்கள்- வைத்தியர் ரவ...
மானிப்பாயில் அரச தனியார் பேருந்துகள் விபத்து!
|
|
|


