விதிமுறைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Tuesday, October 27th, 2020

கொரோனா தொடர்பான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கடந்த தினங்களில் பொதுப் போக்குவரத்தில் உரிய முறைமையில் சுகாதார ஒழுங்குவிதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், பொது இடங்களிலும், வரிசைகளிலும் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை பொதுமக்கள் பின்பற்றாத நிலையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

பொதுமக்கள் தொடர்ந்தும் இவ்வாறாக செயற்படுவார்களாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் அரசியல்வாதிகள் சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து என தெரிவித்து அச்சத்தை உருவாக்க முயல்கின்றனர் - ச...
அரிசி இறக்குமதியால் அரிசியின் விற்பனை விலையில் வீழ்ச்சி - தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவ...
தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் - யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர்...