இந்துக்களின் தெய்வ வரலாறை திரிபுபடுத்துகின்றது சிங்களத் திரைப்படம் – அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் கடும் அதிருப்தி – அறிக்கை தருமாறும் கலாசார அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்பு!
Tuesday, January 9th, 2024
இந்துக்களின் தெய்வ வரலாறை திரிபுபடுத்தும் வகையில் சிங்களத் திரைப்பட மொன்றில் பிள்ளையார் தம்பியாகவும் முருகன் அண்ணனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தனது கடும் அதிருப்தியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘கதிர திவ்யராஜ’ என்ற சிங்களத் திரைப்படமே இவ்வாறு இந்துக்களின் தெய்வ வரலாறை திரிபுபடுத்தி திரையிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்ல, முருகப்பெருமானுக்கு நெற்றிப் பொட்டுக்கு பதிலாக நாமம் இடப்பட்டுள்ளதாகவும், முருகனின் வேலாயுதத்துக்கு பதிலாக சூலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கியுள்ளார்.
எனவே, சைவர்களின் வரலாறை திரிபுபடுத்தும் இந்தத் திரைப்படம் தொடர்பான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் முறையிடுமாறும் நீதிமன்றம் செல்லுமாறும் ஜனாதிபதி ரணில் இங்கு தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் அறிக்கையொன்றை தருமாறும் கலாசார அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106