புதிய ஆண்டுக்கான வேலைத்திட்டங்களுடன் எதிர்வரும் திங்களன்று கூடகின்றது புத்தாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!
Thursday, December 28th, 2023
புத்தாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் திங்கள் கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய ஆண்டுக்கான வேலைத்திட்டங்களை அமைச்சரவையில் சமர்பிக்க உள்ளதாக தெரியவருகிறது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு சகல அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக முதல்நாளே இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த ஆண்டின் இறுதி அமைச்சரவைக்கூட்டம் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது. நத்தார் விடுமுறை காரணமாக கடந்த வாரம் அமைச்சரவைக் கூடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மாநகரசபை உறுப்பினர்களுக்கு யப்பானில் செயலமர்வு!
இன்று மேல்முறையிட்டு மனு விசாரணை !
பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணனி - பட்டம் பெற்றும்வரை கடன் தொகையை செலுத்த தேவையில்லை - ப...
|
|
|


