வடக்கில் கொரோனா அச்சம் இல்லை – ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்கின்றது – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
Monday, December 25th, 2023
வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும் , ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெங்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று எவையும் நீண்டகாலமாக வடமாகாணத்தில் பதிவாகவில்லை. ஆனால் அண்மைய நாட்களாக டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றன.
தினமும் சராசரியாக 100 பேர் வரையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே வடமாகாண மக்கள் கொரோனா தொற்று தொடர்பில் அச்சமடைய தேவையில்லை. ஆனால் டெங்கு நோய் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மணல் விலையை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையீடு செய்யும் - அமைச்சர் மகிந்த அமரவீர தெரி...
அரச நிறுவனங்களுக்கு புதிதாக சேவையாளர்களை இணைத்துக் கொள்வது தற்காலிகமாக இடை நிறுத்தம் - பிரதானிகளுக்...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|
|


