உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தலை அறிவிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி பிரதேச எல்லை நிர்ணயத்திற்காக நியமிக்கப்பட்ட தேசிய குழுவின் செயற்பாடுகளை கருத்திற் கொண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில், இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தற்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது.

ஆனால் அண்மையில் நியமிக்கப்பட்ட உள்ளூராட்சிப் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசியக் குழு அந்தச் செயற்பாடுகளை பாதித்துள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106