விமானிகளின் போராட்டம் இன்றும் தொடர்கிறது!

Saturday, September 10th, 2016

இலங்கை விமான நிறுவனத்தின் விமானிகள் ஆரம்பித்துள்ள மேலதிக வேலை தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து இன்றும் இடம்பெறுவதாக விமானிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட விமானியை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தேரிவித்துள்ளார்.. எவ்வாறாயினும் இலங்கை விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த விமானியின் பணி இடைநிறுத்தமானது, விமான சேவை சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே விமானிகள் சங்கத்தின் கோரிக்கையை நிராகரிப்பதாக இலங்கை விமான நிறுவனம் கூறியுள்ளது.  குறித்த விமானி தொடர்பான ஒழுக்காற்று விசாரணை எதிர்வரும் 27ம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை விமான நிறுவனம் கூறியுள்ளது.

SriLankan1-665x389

Related posts:

தொடரும் காலநிலை சீர்கேட்டின் எதிரொலி - மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரிப்பு - நுகர்வோர் கவலை!
பாடசாலை மாணவர்களுக்கான தேசியரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் ய...
ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் 7800 ஆசிரியர்களுக்கு, புதிய நியமனங்கள் - கல்வி அமைச்சர் ச...

ஐ நாவில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் - இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொ...
இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!
எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துங்கள் - சிக்கனம் என்பது அரசியல்வாதிகளிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண...